பக்கங்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2013

ரத்த உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்


உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.  அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசிய மாகும்.
இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக  வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் ரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாள்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.
தினசரி இரவு  அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள  இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம்  விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால்  ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால்  ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.



கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.
கொள்ளின் பலன்கள்
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சினைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவ தாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்-குன்யா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சினைகளுக்குத் தடவுகிறார்கள்.
சூட்டைக் கிளப்புமா?
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.
எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.
உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து  இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.
கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும்,  கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.