குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி
குறைவாக இருப்ப தால், அடிக்கடி சளித் தொந்தரவு ஏற்படுகிறது. வீட்டு
வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?
அரை அங்குலம் அளவுள்ள சுக்கை நன்றாக
நசுக்கி, அதை ஒரு குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால்
குவளையாக வரும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.
பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு
பால் கலந்து, அரைத் தேக்கரண்டி வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம்.
வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளித் தொந்தரவு, தலைவலி
என எந்தப் பிரச்சினையும் நெருங்காது.
சிலர் கசப்பான பொருள்களை நாக்கில் படாமல்
அப்படியே விழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச்
சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும்.
அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி
அதிகமாகும். அறுசுவைகளையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில்
சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.
மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை
கற்றாழையில் உள்ள மருத்துவக் குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங் களுடைய உப பொருள்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.
ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. மூளையில்
ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான
கோளாறுகளுக்கு, செரிமான சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல்
பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது.
தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான். இப்படி எண்ணற்ற குணங்களைக் கொண்டது கற்றாழை.
வைட்டமின்கள் நிறைந்த வேர்க்கடலை
பசியால் துடிப்பவர்களுக்கு வயிற்றை
நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு
தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்குப் பசித்த வயிறு அமைதி
காக்கும். எல்லா பருப்பு வகைகளையும் போன்றதுதான் வேர்க்கடலையும். அதிக
புரதச்சத்து நிறைந்தது.
அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில்
அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புரதச்
சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். ஆனால்,
வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். 20 கடலைகளுக்கு மேல்
எடுக்கவேண்டாம்.
வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும், வைட்ட
மின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம்
கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே
அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கில்,
வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது.
அதனால்தான் அதை மாட்டுத் தீவனமாக
உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக்
கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கு
பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம்.
அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய
பிண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர் களுக்கான உணவிலும்
சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம்
அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு
வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.
வேர்க்கடலையில் மக்னீசியம் அதிகம்
என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது
உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக
வைக்கும்.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3,
நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்து வதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக்
கொள்கிறது.
வாழ்த்துக்கள் நண்பரே, தொடரட்டும் கட்டுரை வழியிலான உமது மருத்துவ விழிப்புணர்வுப் பணி
பதிலளிநீக்குGood Effort Mr.Prabhu
பதிலளிநீக்குSenNathan SVM